Sunday, July 20, 2025
28.4 C
Colombo
செய்திகள்உலகம்கனடாவில் காலிஸ்தான் பிரிவினைவாதி ஒருவர் சுட்டுக்கொலை

கனடாவில் காலிஸ்தான் பிரிவினைவாதி ஒருவர் சுட்டுக்கொலை

சுக்தூல் சிங் என பெயர்கொண்ட காலிஸ்தான் பிரிவினைவாதி ஒருவர் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக சர்வசேத செய்திகள் தெரிவிக்கின்றன.

இரு கும்பலுக்கு இடையே நடைபெற்ற சண்டையில் அவர் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அவர் 2017 இல் போலி கடவுச்சீட்டு மூலம் இந்தியாவிலிருந்து தப்பி, கனடாவிற்கு பிரவேசித்தவர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, இந்தியாவில் இருந்து தப்பி கனடாவிற்கு குடிபெயர்ந்த ஹாதீப் சிங் நிஜ்ஜார் என்கிற காலிஸ்தான் தீவிரவாதி கடந்த ஜூன் மாதம் சுட்டு கொலை செய்யப்பட்டார்.

இதனை தொடர்ந்து கனடா அரசு, தன்னுடைய நாட்டு பிரஜை ஒருவர் கொல்லப்பட்டதற்கு பின்னால் இந்தியாவின் பிரமுகர்களின் சதி உள்ளதென குற்றம் சாட்டி, இந்திய உளவுத்துறை அதிகாரி ஒருவரை நாட்டை விட்டு வெளியேறுமாறு கூறியது.

இதன் தொடர்ச்சியாக, இரு நாட்டின் உறவும் பிளவுபடத்தொடங்கியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles