Monday, November 18, 2024
25.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கையின் அபிவிருத்திக்காக 19 மில்லியன் டொலர்களை வழங்கும் அமெரிக்கா

இலங்கையின் அபிவிருத்திக்காக 19 மில்லியன் டொலர்களை வழங்கும் அமெரிக்கா

இலங்கையின் அபிவிருத்திக்காக மேலதிகமாக 19 மில்லியன் டொலர்களை ஒதுக்கவுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்காவின் முகவர் நிறுவனமான USAID மற்றும் இலங்கை அரசாங்கத்திற்கு இடையிலான ஒப்பந்தத்தின் பிரகாரம், இலங்கைக்கான மேலதிகத் தொகையாக 19.2 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்கப்படவுள்ளது.

இது தொடர்பான உடன்படிக்கை நேற்று (20) நிதியமைச்சில் கைச்சாத்திடப்பட்டதுடன், அமெரிக்கா இலங்கைக்கு வழங்கும் தொடர்ச்சியான நெருக்கமான ஒத்துழைப்பையும், நட்புறவையும் இந்நாட்டு மக்கள் பாராட்டுவதாக நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles