நியூயோர்க்கில் உள்ள ஐநா தலைமையகத்தில் நடைபெற்றுவரும் ஐ.நா பொது சபை கூட்டத்தில் இலங்கை அணு ஆயுதத் தடை ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது.
இதன்படி, அணு ஆயுதத் தடை ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட 69வது நாடாக இலங்கை பதிவாகியுள்ளது.
ஐ.நா பொதுச் சபையின் 78 ஆவது கூட்டத் தொடரில் இலங்கை அணு ஆயுதத் தடை ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட சட்ட ஆவணத்தை கடந்த சில மாதங்களாக மேற்கொண்டு வந்தது.
2017 ஜூலை 07 அன்று நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையில் அணு ஆயுதத் தடை ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையில் இலங்கை பங்கேற்றது. மேலும் அதை ஏற்றுக்கொள்வதற்கு ஆதரவாக வாக்களித்த 122 நாடுகளிலும் உள்ளடங்கும்.
2016 ஆம் ஆண்டு ஜெனிவாவில் நடைபெற்ற திறந்தநிலை பணிக்குழு (OEWG) செயல்முறையில் பங்கேற்பதன் மூலம் ஒப்பந்த பேச்சுவார்த்தை செயல்முறைக்கு வழிவகுத்தது.