அனுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்னவின் வாகனம் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் 13 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
இதன்படி, சில அனுமானங்களின் அடிப்படையில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்ன கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு அனுராதபுரத்திலுள்ள தமது இல்லத்துக்கு காரில் பயணித்துகொண்டிருந்தபோது, மற்றொரு காரில் பிரவேசித்த சிலர் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச்சென்றனர்.
இது தொடர்பான சமர்ப்பணங்களை பொலிஸார் நேற்று நீதிமன்றில் முன்வைத்தபோது, துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய அனைத்து சந்தேக நபர்களையும் உடனடியாக கைது செய்யுமாறு அனுராதபுரம் பிரதான நீதவான் உத்தரவிட்டுள்ளார்.