Sunday, July 27, 2025
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசிறுமிகளின் அந்தரங்க புகைப்படங்களை விற்ற பிக்கு கைது

சிறுமிகளின் அந்தரங்க புகைப்படங்களை விற்ற பிக்கு கைது

ராகம பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் இருந்து 19 வயதுடைய பிக்கு ஒருவரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

சிறுமிகளின் நிர்வாணப் படங்களை சமூக ஊடகங்கள் ஊடாக விற்பனை செய்த சந்தேகத்தின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய, நடத்தப்பட்ட விசாரணைகளின் மூலம், சம்பந்தப்பட்ட இடத்திற்குச் சென்ற புலனாய்வு அதிகாரிகள், அந்தக் விகாரையில் இருந்தே புகைப்படங்கள் விற்பனை செய்யும் நடவடிக்கை ஒன்று இடம்பெற்றுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

விகாரையின் கணினியில் சுமார் 1,500 சிறுமிகளின் நிர்வாணக் காட்சிகள் இருந்தன, அதில் 80 சதவிகிதம் 10 வயதுக்குட்பட்ட சிறுமிகளுடையதென தெரியவந்துள்ளது.

இந்த நிர்வாணப் படங்களை சமூக ஊடகங்களில் விற்றதாக பிக்கு ஒப்புக்கொண்டுள்ளார். கைது செய்யப்பட்ட அதிகாரி நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles