Tuesday, November 19, 2024
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கை பெற்ற கடனை வேகமாக மீள செலுத்தும் என எதிர்பார்க்கவில்லை - பங்களாதேஷ் பிரதமர்

இலங்கை பெற்ற கடனை வேகமாக மீள செலுத்தும் என எதிர்பார்க்கவில்லை – பங்களாதேஷ் பிரதமர்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு நேற்று (19) நியூயோர்க்கில் இடம்பெற்றது.

தெற்காசிய பிராந்தியத்தின் நாடுகளாக, இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை விரிவுபடுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தையும் இரு நாட்டு தலைவர்களும் விரிவாக கலந்துரையாடினர்.

மேலும், கடந்த காலத்தில் பங்களதேஷிடமிருந்து இலங்கை பெற்றுக்கொண்ட கடனை குறுகிய காலத்துக்குள் மீளச் செலுத்திவிடும் என எதிர்பார்க்கவில்லை எனத் பங்களாதேஷ் பிரதமர் தெரிவித்தார்.

அந்த கடனை செலுத்த முடிந்ததன் ஊடாக இலங்கை பொருளாதார ரீதியில் அடைந்துள்ள முன்னேற்றம் தெரிகிறது என்பதோடு, அதனை தொடர்ச்சியாக தக்கவைத்துக்கொள்வதன் ஊடாக இலங்கை சுமூகமான நிலைமையை அடைந்துக்கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

கடந்த சவாலான காலகட்டத்தில் இலங்கைக்கு பங்களாதேஷ் வழங்கிய அசைக்க முடியாத ஆதரவிற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் பங்களாதேஷ் மக்களுக்கும் தனது நன்றியைத் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles