செய்திகள்உள்நாட்டுரயில்வே திணைக்கள மறுசீரமைப்பு அறிக்கை அடுத்த மாதம் அமைச்சரவைக்கு

ரயில்வே திணைக்கள மறுசீரமைப்பு அறிக்கை அடுத்த மாதம் அமைச்சரவைக்கு

ரயில்வே திணைக்களத்தின் மறுசீரமைப்பு தொடர்பான இடைக்கால அறிக்கை அடுத்த மாத முற்பகுதியில் அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக அதற்காக நியமிக்கப்பட்ட குழு தெரிவித்துள்ளது.

குழு மீண்டும் இன்று(20) கூடவுள்ளதாக அதன் தலைவரும் துறைமுகம் மற்றும் விமான சேவைகள் அமைச்சின் செயலாளருமான ருவன்சந்திர தெரிவித்துள்ளார்.

ரயில்வே திணைக்களத்தின் செயற்பாட்டு நட்டத்தை ஈடுசெய்து சிறந்த சேவையை வழங்குவதற்கான முன்மொழிவுகளை இந்த குழு பரிசீலிக்கவுள்ளது.

பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சிலரும் இந்த குழுவில் அங்கம் வகிப்பதாகவும் யோசனை தயாரிக்கப்படுகின்ற சந்தர்ப்பத்தில் பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் கருத்துகள் உள்வாங்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles