2023 ஜூலை மாதத்திற்கான மாதாந்திர வறுமைக் கோட்டு அட்டவணையை மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
இந்த நாட்டில், ஒரு நபர் தனது குறைந்தபட்ச அடிப்படைத் தேவைகளை ஒரு மாதத்தில் பூர்த்தி செய்ய ரூ. 15,978 தேவை என மேற்படி கணக்கெடுப்பு தெரிவித்துள்ளது.
தேசிய ரீதியில் இந்தத்தொகை ரூ. 16,089 என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 2023 இல் மேற் கொண்ட புள்ளிவிவரத்தின்படி, நான்கு பேர் கொண்ட குடும்பத்தின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தேவையான குறைந்தபட்ச மாதச் செலவு ரூ. 63,912 ஆகும்.
மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் இந்த அறிக்கையின்படி, கொழும்பு மாவட்டத்தில் வசிக்கும் ஒருவர் தமது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக அதிகம் செலவு செய்ய வேண்டியுள்ளது. இத் தொகை ரூ. 17,352 ஆகும் .
மொனராகலை மாவட்டத்தில் மிகக் குறைந்த வாழ்க்கைச் செலவு பதிவாகியுள்ளதுடன் அதன் பெறுமதி ரூ. 15,278.ஆகும்.