இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான 7,298 பேருந்துகளில் 2135 பேருந்துகள் சேவையில் இருந்து விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
மேலும், நாடு முழுவதிலும் உள்ள நகரங்கள், புறநகர்ப் பகுதிகள், கிராமப்புற வீதிகள் மற்றும் பயணிகள் போக்குவரத்து சேவைகளை உள்ளடக்குவதற்கு 7,339 பேருந்துகள் தேவைப்படுவதாக இலங்கை போக்குவரத்து சபை குறிப்பிட்டுள்ளது.
சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் இல்லாத காரணத்தினால் பயணிகள் போக்குவரத்து சேவையை உரிய முறையில் பேண முடியாதுள்ளதாகவும் போக்குவரத்து சபையின் எதிர்கால திட்டங்களுக்கு அமைய 1,500 புதிய பேருந்துகள் தேவைப்படுவதாகவும் சபை சுட்டிக்காட்டியுள்ளது.