இலங்கை மின்சார சபையில் பணியாற்றிய 100 பொறியியலாளர்கள் நாட்டை விட்டு சென்றுள்ளதாக மின்சார சபை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் 100 பேர் வெளிநாடு செல்ல அனுமதி கோரியுள்ளதாக அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.
தற்போது மின்சார சபையில் பணியாற்றும் பொறியாளர்கள் உட்பட 2500 ஊழியர்கள் பதவி விலகியுள்ளதாகவும், நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் அதிகப்படியான வரி வசூல் ஆகியவையே அதற்கான காரணம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.