குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் மின்சாரக் கட்டணத்திற்கு நிவாரணம் வழங்கும் வழிமுறைகள் குறித்து அமைச்சர் கஞ்சன விஜேசேகர, ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி Marc Andre Franche உடன் கலந்துரையாடியுள்ளார்.
இந்த கலந்துரையாடல் நேற்று (18) மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சில் இடம்பெற்றுள்ளது.
நாட்டில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களுக்கான பசுமை நிதி வசதிகள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், மின்சார சபையின் மறுசீரமைப்பு தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டுள்ளது.