ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இலங்கையின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் செயற்திட்டத்திற்கு ஆதரவளிப்பதாக தென்கொரிய ஜனாதிபதி யூன் சுக் யெயோல் தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும், தென்கொரிய ஜனாதிபதிக்கும் இடையில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 78 ஆவது கூட்டத்தொடரின் போது சந்திப்பு இடம்பெற்றிருந்தது.
இதன்போது, இலங்கை எதிர்கொண்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டையும், மக்களையும் விடுவிப்பதற்கான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வேலைத்திட்டத்தை தென்கொரிய ஜனாதிபதி வரவேற்றதுடன்,அவரின் அர்ப்பணிப்புக்கும் பாராட்டு தெரிவித்துள்ளார்.
அத்துடன், எதிர்காலத்தில் இலங்கை இளைஞர், யுவதிகளுக்கு தென்கொரியாவில் பல புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்க எதிர்பார்க்கப்படுவதாகவும், காலநிலை மாற்றத்தை குறைப்பது தொடர்பான ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையில் விரைவில் கைச்சாத்திட எதிர்பார்ப்பதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.