Saturday, November 16, 2024
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகட்டட நிர்மாணத்துறையின் பின்னடைவை தடுக்க 13 முன்மொழிவுகள்

கட்டட நிர்மாணத்துறையின் பின்னடைவை தடுக்க 13 முன்மொழிவுகள்

கட்டட நிர்மாணத்தொழிற்துறையில் ஏற்படும் பின்னடைவைத் தவிர்ப்பதற்கு அவசியமான 13 முன்மொழிவுகளை ஜனாதிபதிக்கு சமர்ப்பித்துள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் டபிள்யூ.எஸ். சத்யானந்த தெரிவித்துள்ளார்.

நிர்மாணத்துறை தொடர்பில் ஆராய அமைச்சுக்களின் செயலாளர்கள் தலைமையில் முன்னதாக, ஆறு குழுக்களை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நியமித்தார்.

அந்தக் குழுக்களின் மூலம் யோசனைகள் கோரப்பட்டிருந்த நிலையில், அதற்காக 50 முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அவற்றில் 13 அவசர முன்மொழிவுகள் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளன.

இந்நிலையில், 2024 ஆம் ஆண்டுக்கான பாதீட்டு திட்டத்தில், கட்டட நிர்மாணத்துறை எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை முன்வைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் டபிள்யூ.எஸ். சத்தியானந்த தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles