Saturday, February 14, 2026
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகொழும்பு நகர ஹோட்டல்களுக்கான குறைந்தபட்ச அறைக் கட்டணங்கள் அறிமுகம்

கொழும்பு நகர ஹோட்டல்களுக்கான குறைந்தபட்ச அறைக் கட்டணங்கள் அறிமுகம்

கொழும்பு நகர ஹோட்டல்களுக்கான குறைந்தபட்ச அறைக் கட்டணங்களை அறிமுகப்படுத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தல் ஒக்டோபர் 01, 2023 முதல் நடைமுறைக்கு வருகிறது.

இது தொடர்பில் ஹோட்டல்களின் பொது முகாமையாளர்களுக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின்தலைவர் பிரியந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

விநியோக வழிகளில் அறை விலையை தரப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட தொடர்ச்சியான வழிகாட்டல்கள் முன்வைக்கப்படுவதுடன், கொழும்பு நகர ஹோட்டல்கள் வர்த்தமானி அறிவிப்பை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் எனவும், அறை கட்டணங்களில் சீரான தன்மையை உறுதி செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5-நட்சத்திர ஹோட்டல்களுக்கு $ 100, 4-நட்சத்திர நிறுவனங்களுக்கு $ 75, 3-நட்சத்திர விடுதிகளுக்கு $ 50, 2-நட்சத்திர ஹோட்டல்களுக்கு $35 மற்றும் ஒரு நட்சத்திர சுற்றுலா ஹோட்டல்களுக்கு $ 20 விலைகள் உள்ளன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles