Monday, July 21, 2025
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசிறுவர் - மகப்பேறு சிகிச்சைகளுக்காக AI தொழில்நுட்பத்தை பயன்படுத்த திட்டம்

சிறுவர் – மகப்பேறு சிகிச்சைகளுக்காக AI தொழில்நுட்பத்தை பயன்படுத்த திட்டம்

இலங்கையில் உள்ள மகப்பேறு மற்றும் சிறுவர் சிகிச்சை நிலையங்களுக்கு செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்த குடும்ப சுகாதார பணியகம் தீர்மானித்துள்ளது.

இதற்கான ஆரம்ப தரவு சேகரிப்பு அடுத்த மாதம் மேற்கொள்ளப்படும் என குடும்ப சுகாதார நிபுணர் வைத்தியர் கபில ஜயரத்ன தெரிவித்தார்.

கனேடிய அரசாங்கத்தின் மானியத் திட்டம் மற்றும் சர்வதேச மையத்தின் கீழ் இது நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இருப்பினும், செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி கரு, தாய் மற்றும் குழந்தைக்கு எதிர்காலத்தில் ஏற்படும் சிக்கல்களை மருத்துவர்களால் கணிக்க முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles