உலகில் பணவீக்கம் அதிகரித்துள்ள நாடுகள் பட்டியலில் இலங்கை மூன்றாவது இடத்தில் உள்ளது.
ஹன்க் பணவீக்க பட்டியலில் (Hank Inflation Index) இது குறிப்பிடப்பட்டுள்ளது.
சிம்பாப்வே மற்றும் லெபனன் முதலாம் மற்றும் இரண்டாம் இடங்களில் உள்ளன.
இதற்கு முன்னர் சுட்டெண்ணில் 6வது இடத்தில் இருந்த இலங்கை தற்போது மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
இலங்கை இப்போது 119% பணவீக்க விகிதத்தை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.