Tuesday, November 19, 2024
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசட்டவிரோதமாக வெளிநாடு செல்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

சட்டவிரோதமாக வெளிநாடு செல்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

சட்டவிரோதமான முறையில் தொழிலுக்காக வௌிநாடு செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், இந்த எண்ணிக்கையில் அதிகரிப்பு காணப்படுவதாக வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் அவ்வாறான 2,500 வரையான சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பணியகத்தின் பிரதி பொது முகாமையாளர் காமினி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

கடந்த வருடத்தில் குறித்த எண்ணிக்கை 1900 ஆகக் காணப்பட்டது.

சட்டவிரோதமாக வௌிநாடு செல்வதைத் தவிர்க்குமாறு, வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் பிரதி பொது முகாமையாளர் காமினி செனவிரத்ன பொதுமக்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles