Saturday, February 14, 2026
31.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபயணப்பைக்குள் இருந்து ஆணின் சடலம் மீட்பு

பயணப்பைக்குள் இருந்து ஆணின் சடலம் மீட்பு

சீதுவ, தண்டுகம் ஓயாவின் கரையில் கைவிடப்பட்ட பயணப் பைக்குள் இருந்து ஆண்ணொருவரின் சடலம் நேற்றிரவு (15) கண்ணெடுக்கப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்டவர் சில தினங்களுக்கு முன்னர் உயிரிழந்திருக்கலாம் என நம்பப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என்பதுடன், அவரின் வயது 35 – 40 க்கு இடையில் இருக்கலாம் என்றும் சந்தேககிக்கப்படுகிறது.

இறந்தவர் 5’8” உயரம் கொண்ட ஒரு ஆண் என்றும் அவர் சடலமாக மீட்கப்படும் போது, சிவப்பு நிற சட்டை மற்றும் ஒரு ஜோடி பழுப்பு நிற கால்சட்டை அணிந்திருந்தார் என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்.

நீதிவான் விசாரணைகளை அடுத்து சடலம் நீர்கொழும்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சீதுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles