இந்தியாவின் மும்பை விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
06 பயணிகள் மற்றும் விமானி மற்றும் துணை விமானியுடன் இன்று காலை விசாகப்பட்டினத்திலிருந்து வந்த லியர் ஜெட் விமானம் தரையிறங்கும் போது ஓடுபாதையில் சறுக்கியதால் விமான நிலையம் மூடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடும் மழைக்கு மத்தியில் விமானம் தரையிறங்கும் போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன