Friday, June 19, 2026
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டு15,763 சிறுவர்களுக்கு கடும் போசணை குறைபாடு

15,763 சிறுவர்களுக்கு கடும் போசணை குறைபாடு

நாட்டில் 15,763 சிறுவர்கள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தேசிய மட்டத்திலான போசாக்கு நிலை குறித்த தரவுகளைப் பெறுவதற்காக கடந்த ஜூன் மாத நிறைவில் நாடளாவிய ரீதியில் நடத்தப்பட்ட போஷாக்கு கணக்கெடுப்பில் இந்த விடயம் தெரியவந்துள்ளதாக சுகாதார அமைச்சின் குடும்பநல சுகாதார பணியகம் தெரிவித்துள்ளது.

ஜூன் முதலாம் திகதி வரை, 5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளின் வளர்ச்சி நிலை இதன்போது, மதிப்பீடு செய்யப்பட்டது. குடும்பநல சுகாதார சேவையில் 5 வயதுக்குட்பட்ட 1,406,213 சிறுவர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில்இ 13 இலட்சத்து 57,675 சிறுவர்கள் தொடர்பில் இந்த மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாக குடும்பநல சுகாதார பணியகம் தெரிவித்துள்ளது.

குழந்தை ஆரோக்கியம் மற்றும் மேம்பாடு தொடர்பான வயதுக்கு ஏற்ற எடை அட்டவணையில், இளஞ்சிவப்பு அல்லது சிவப்பு நிறத்தில் குறிக்கப்படும் வயதுக்கு ஏற்ற எடை குறைவாக இருக்கும் சிறுவர்களின் சதவீதம் 17 ஆக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles