Tuesday, November 19, 2024
27.4 C
Colombo
செய்திகள்உலகம்நளினி, முருகன் உள்ளிட்ட நால்வரை இலங்கைக்கு அனுப்ப தீர்மானம்

நளினி, முருகன் உள்ளிட்ட நால்வரை இலங்கைக்கு அனுப்ப தீர்மானம்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான முருகன், நளினி உள்ளிட்ட 4 பேரை இலங்கைக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன், நளினி உட்பட 4 பேரை விடுவித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்ததையடுத்து, முருகனை திருச்சி அகதிகள் முகாமில் இருந்து விடுவித்து தன்னுடன் சேர்ந்து வாழ அனுமதிக்க கோரி நளினி வழக்கு தொடர்ந்தார்.

4 பேரின் கடவுச்சீட்டு உள்ளிட்ட பயண ஆவணங்கள் கேட்டு கடந்த டிசம்பர் மாதத்தில் இந்தியாவிற்கான இலங்கை துணை தூதரகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பயண ஆவணங்கள் கிடைத்தவுடன் 4 பேரும் இலங்கைக்கு அனுப்பப்படுவார்கள் எனவும் மத்திய அரசு கூறியுள்ளது.

இதேவேளை, நளினி இந்திய பிரஜை என்பதுடன், அவரது கணவரான முருகன் இலங்கைப் பிரஜையாவார். இதையடுத்து நளினியின் சேர்ந்து வாழ அனுமதிக்கும் கோரிக்கைக்கு அமைய அவரையும் இலங்கை அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles