Sunday, July 27, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஜனாதிபதியிடம் தேர்தலை நடத்துமாறு கோரும் பசில்

ஜனாதிபதியிடம் தேர்தலை நடத்துமாறு கோரும் பசில்

பிற்போடப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் பாரியளவிலான வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளதாகவும், தேர்தல் தாமதமானதால் அக்குழுவிற்கு பாரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஜனாதிபதிக்கு விளக்கமளித்துள்ளார்.

இதன்காரணமாக அந்த வேட்பாளர்கள் தமது தொகுதிகளில் பணிகளை மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும், தமது கடமைகளில் சில இடையூறுகள் ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் சாதகமான தீர்வொன்றை வழங்குமாறு முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளார்.

பசில் ராஜபக்ஷ மற்றும் பொதுஜன பெரமுனவின் முன்னாள் உள்ளூராட்சி பிரதிநிதிகள் இது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் நேற்று கலந்துரையாடியுள்ளனர்.

உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துமாறு பொதுஜன பெரமுனவின் பிரதிநிதிகள் கடந்த காலங்களில் பல தடவைகள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது .

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles