குருணாகல் நகரில் உள்ள கலப்பு பாடசாலை ஒன்றில் ஐந்தாம் தரத்தில் கல்வி கற்கும் 11 மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படும் ஆங்கில ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகத்திற்குரிய ஆசிரியர் பொத்துஹெர பிரதேசத்தில் வசிக்கும் 55 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை எனவும், பெற்றோர் பொலிஸில் முறைப்பாடு செய்ததையடுத்து அவர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றிருந்தாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.
சந்தேகநபர் தனது பாடத்தை கற்பிக்கும் போது, வகுப்பில் உள்ள மாணவிகளுக்கு மட்டும் விசேட கவனம் செலுத்தி மாணவிகளின் உடலை தொட்டு துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
நாளாந்த துஷ்பிரயோகம் தொடர்பில் மாணவிகள் வீட்டில் உள்ள பெற்றோருக்கு தெரியப்படுத்திய பின்னரே குருநாகல் பொலிஸ் தலைமையகத்தின் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
துஷ்பிரயோகத்திற்கு உள்ளான மாணவிகளின் பெற்றோர்கள் இது குறித்து பாடசாலை அதிபரிடம் முறைப்பாடு செய்திருந்தனர்.
எவ்வாறாயினும், கடமைக்கு இடையூறு விளைவித்த சம்பவம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் பிரகாரம், கோபமடைந்த பெற்றோர்கள் குழு அதிபரை அச்சுறுத்தியதுடன், பெற்றோர் குழுவிற்கு எதிராக சட்ட நடவடிக்கையும் எடுத்துள்ளது.
மேலும் இந்த ஆசிரியரால் பாதிக்கப்பட்ட மாணவிகள் இருந்தால் பெற்றோர் முன்வந்து புகார் அளிக்குமாறு பொலிசார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.