Monday, November 18, 2024
28.3 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஈஸ்டர் தாக்குதல்: ஹரினுக்கு எதிரான விசாரணைகளை நிறைவுசெய்ய பணிப்புரை

ஈஸ்டர் தாக்குதல்: ஹரினுக்கு எதிரான விசாரணைகளை நிறைவுசெய்ய பணிப்புரை

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவுக்கு எதிரான விசாரணைகளை நிறைவுசெய்யுமாறு பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக சட்டமா அதிபர் இன்று உயர் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளார்.

இநத சம்பவம் தொடர்பில் தாம் கைது செய்யப்படுவதை தடுக்கும் வகையில் உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு கோரி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ முன்னதாக அடிப்படை உரிமைகள் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான பிரதி மன்றாடியார் நாயகம் திலிப பீரிஸ் இந்த அறிவிப்பை விடுத்திருந்தார்.

இதன்போது, இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசேட விசாரணை பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணை தொடர்பான கோப்புகளை ஆராய்ந்த சட்டமா அதிபர், குறித்த பணிப்புரையை விடுத்ததாக பிரதி மன்றாடியார் நாயகம் நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.

எவ்வாறாயினும், இந்த மனு மீதான விசாரணை தொடருமா இல்லையா என்பதை தீர்மானிப்பதற்காக, நீதியரசர் ஜனக் டி சில்வா அங்கம் வகிக்காத நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் அதனை எதிர்வரும் 18ஆம் திகதி அழைப்பதற்கும் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles