Wednesday, April 15, 2026
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமுச்சக்கர வண்டி விபத்தில் மூவர் காயம்

முச்சக்கர வண்டி விபத்தில் மூவர் காயம்

ஹட்டன் – பொகவந்தலாவ பிரதான வீதியின் நோர்வூட், சென்ஜோன் டிலரி பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்று வீதியை வி்ட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்துள்ளனர்

இன்று (13) மதியம் 12.45 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது என நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.

பொகவந்தலாவ, மோரா தோட்டபகுதியில் இருந்து, ஹட்டன் நோக்கி சென்ற முச்சக்கர வண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

சாரதி, அவரது மனைவி மற்றும் ஒன்றரை வயது குழந்தை ஆகியோர் முச்சக்கர வண்டியில் பயணித்துள்ளனர்.

காயமடைந்த மூவரும் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles