செய்திகள்உள்நாட்டு2 கோடி ரூபா பெறுமதியான பீடி இலைகள் பறிமுதல்

2 கோடி ரூபா பெறுமதியான பீடி இலைகள் பறிமுதல்

சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட 2 கோடி ரூபா பெறுமதியான சுமார் 2,223 கிலோகிராம் பீடி இலைகள் புத்தளம் இளந்தடி கடற்பகுதியில் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

இளந்தடி கடற்பகுதியில் கடற்படையினர் நேற்று(12) மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போதே மேற்படி பீடி இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

70 பொதிகளில் பொதியிடப்பட்ட சுமார் 2,223 கிலோ 100 கிராம் பீடி இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் முச்சக்கரவண்டியொன்றும் மீட்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles