செய்திகள்உள்நாட்டுபொலிஸ் உத்தியோகத்தர் என அறிமுகப்படுத்தி பண மோசடியில் ஈடுபட்ட பெண் கைது

பொலிஸ் உத்தியோகத்தர் என அறிமுகப்படுத்தி பண மோசடியில் ஈடுபட்ட பெண் கைது

தம்மை பொலிஸ் உத்தியோகத்தர் என அறிமுகப்படுத்தி பண மோசடியில் ஈடுபட்டு வந்த பெண் ஒருவர் பொரளை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

24 வயதுடைய குறித்த பெண் கல்கிஸ்ஸை பகுதியிலுள்ள தனியார் காப்புறுதி நிறுவனமொன்றில் பணிபுரிந்து வந்ததாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மொரட்டுவை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய குறித்த பெண் முறைப்பாட்டாளர்களிடம் இரண்டு சந்தர்ப்பங்களில் பணத்தை பெற்றுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அத்துடன் சந்தேகநபரான குறித்த பெண் போலி அடையாள அட்டை மற்றும் பொலிஸ் தலைமையகத்தின் முகவரியில் தயாரிக்கப்பட்ட போலி ஆவணம் என்பவற்றின் படங்களை வட்ஸ்அப் மூலம் முறைப்பாட்டாளர்களுக்கு அனுப்பியுள்ளமையும் தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles