Friday, April 10, 2026
27 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகொழும்பு பல்கலை விடுதிக்காக நாரஹேன்பிட்டியில் அடுக்குமாடி குடியிருப்பு

கொழும்பு பல்கலை விடுதிக்காக நாரஹேன்பிட்டியில் அடுக்குமாடி குடியிருப்பு

1.2 பில்லியன் ரூபா பெறுமதியான கலிங்க மாவத்தையில் அடுக்குமாடி குடியிருப்புடன் கூடிய 110 பேர்ச் காணியை கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு இலவசமாக வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக வெகுஜன ஊடகத்துறை அமைச்சர், அமைச்சரவைப் பேச்சாளர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (12) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இது மிகவும் பெறுமதியான பிரதேசம் என தெரிவித்த அமைச்சரவை பேச்சாளர், ஜனாதிபதியும் கல்வி பயின்ற பல்கலைக்கழகம் கொழும்பு பல்கலைக்கழகம் எனவும் தெரிவித்தார்.

மேற்படி அடுக்குமாடி குடியிருப்பை பல்கலைக்கழகத்திற்கு எவ்வித கட்டணமும் இன்றி முழு செலவையும் அரசே பொறுப்பேற்று அன்பளிப்பாக வழங்குவதற்கு, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நேற்று அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் வலியுறுத்தினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles