பிரேசிலில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பப்பட்ட பொதியில் 2.5 கிலோ கொக்கெய்ன் போதைப்பொருள் இருந்ததை இலங்கை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர்.
இதன் சந்தைப் பெறுமதி சுமார் 190 மில்லியன் ரூபா என சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
கைப்பந்து வலையின் ஓரத்தில் இருந்த குழாயில் போதைப்பொருள் கையிருப்பு சூட்சசமாக மறைத்து வைக்கப்பட்டிருந்தது.
குறித்த பொதியை விடுவித்துக் கொள்வதற்காக அங்கு வந்த அதிகாரம் பெற்ற அதிகாரி ஒருவர் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த பொதி கொழும்பு பிரதேசத்தை சேர்ந்த ஒருவரின் பெயருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மேலதிக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
போதைப்பொருள் கையிருப்பு மற்றும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.