Saturday, November 16, 2024
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகல்விக் கொள்கையில் விரைவில் மாற்றம்

கல்விக் கொள்கையில் விரைவில் மாற்றம்

இலங்கையின் கல்விக் கொள்கையில் புதிய மாற்றம் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்கு தேசிய கல்விக் கொள்கையொன்றை உருவாக்குவது காலத்தின் தேவையாக இருக்கிறது என்று இலங்கையில் உயர்கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கு பொருத்தமான பரிந்துரைகளை வழங்குவதற்கான நாடாளுமன்ற விசேட தெரிவுக் குழுவின் தலைவர் என்ற அடிப்படையில் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

போட்டித் தன்மைகொண்ட கல்வி முறையொன்று இருக்கும் வரையில் நல்லொழுக்கமுள்ள சமூகத்தை கட்டியெழுப்ப முடியாது. தொழிற்பயிற்சிக் கல்வி நாட்டின் தற்போதைய தேவை. பல்கலைக்கழகங்களுக்கு வழங்கப்படும் அங்கீகாரம் அந்த நிறுவனங்களுக்கும் வழங்கப்பட வேண்டும்.

இந்த நாட்டின் கல்வி, உயர் தரத்தில் உள்ளது. ஆனால்,அவற்றில் நம் பிள்ளைகள் உயர்கல்வி பெறுவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன என அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles