Thursday, July 17, 2025
27 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசிங்கப்பூர் விடோல் ஏசியாவிடமிருந்து எரிபொருள் கொள்வனவு செய்ய அனுமதி

சிங்கப்பூர் விடோல் ஏசியாவிடமிருந்து எரிபொருள் கொள்வனவு செய்ய அனுமதி

எதிர்வரும் 04 மாதகாலத்துக்கு தேவையான ஒக்டேன் 92 Unl வகை பெற்றோல் கப்பல்கள் 04 இனைக் கொள்வனவு செய்வதற்காக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் பதிவுசெய்யப்பட்ட விநியோகத்தர்களிடம் நீண்டகால ஒப்பந்தத்திற்காக விலைமனு கோரப்பட்டுள்ளது.

எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் அடுத்த வருடம் ஜனவரி மாதம் 21ஆம் திகதி வரையான காலப்பகுதிக்கே இந்த விலைமனு கோரப்பட்டுள்ளது.

அதற்காக 04 கம்பனிகள் விலைமனுக்கள் சமர்ப்பித்துள்ளன.

அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள விசேட நிரந்தரப் பெறுகைக் குழுவின் பரிந்துரைக்கமைய குறித்த பெறுகையை சிங்கப்பூர் விடோல் ஏசியா கம்பனிக்கு வழங்குவதற்காக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles