இலங்கையில் பொதுவாகக் காணப்படும் Toque Macaque எனும் குரங்குகளின் சனத்தொகையைக் கட்டுப்படுத்துவதற்கான வேலைத்திட்டம் ஒன்றை தயாரிப்பதற்கான யோசனையொன்று அரசாங்கத்திற்கு சமர்ப்பிக்கப்படும் என விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார இராஜாங்க அமைச்சர் ரோஹண திஸாநாயக்க தெரிவித்தார்.
இது தொடர்பில் வனவிலங்கு மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டு உரிய வேலைத்திட்டம் துரிதப்படுத்தப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மாத்தளை மற்றும் மகுலேமடை பகுதிகளிலுள்ள விவசாய பிரதிநிதிகளை சந்தித்த போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
Toque Macaque நாடு முழுவதும் பயிர்களுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்துவதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.