அமெரிக்காவில் நியூயோர்க் மற்றும் வொஷிங்டன் பகுதிகளில் இடம்பெற்ற செப்டெம்பர் 11 பயங்கரவாத தாக்குதல் நடந்து இன்றுடன் 22 வருடங்கள் நிறைவடைந்துள்ளன.
சுமார் மூவாயிரம் பேர் கொல்லப்பட்ட குறித்த பயங்கரவாத தாக்குதலை நினைவுகூறும் நிகழ்வுகள் இன்றைய தினம் அலஸ்காவில் இடம்பெறவுள்ளது.
குறித்த நிகழ்வில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இராணுவ அதிகாரிகள் உள்ளிட்ட பலர், உரையாற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
2001 ஆம் ஆண்டு அல்-கொய்தா என கூறப்படும் அமைப்பினர், 2 ஜெட் விமானங்களைக் கொண்டுஇ அமெரிக்காவின் நியூயோர்க்கில் உள்ள உலக வர்த்தக மையத்தின் இரட்டைக் கோபுரங்கள் மீது மோதியதால், இரண்டு கட்டங்களும் இடிந்து வீழ்ந்தன.
செப்டம்பர் 11 என்பது அமெரிக்காவின் மாகாணங்களில் கூட்டாட்சி அங்கீகாரம் பெற்ற தேசிய சேவை மற்றும் நினைவூட்டல் தினம் என்பது குறிப்பிடத்தக்கது.