Tuesday, April 22, 2025
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டு3 தனியார் மருத்துவ கல்லூரிகளை ஆரம்பிக்க அனுமதி

3 தனியார் மருத்துவ கல்லூரிகளை ஆரம்பிக்க அனுமதி

3 தனியார் மருத்துவ கல்லூரிகளை ஆரம்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

கண்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அமைச்சர் இது தொடர்பில் கருத்து வெளியிட்டார்.

மருத்துவம் படிக்க தகுதியான பல மாணவர்கள் உள்ளனர். எனினும் நாட்டில் தற்போது 11 பல்கலைக்கழகங்களே உள்ளன. இது போதாது. எமது பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பட்டமும் உலகளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

அதே தரத்தில் தனியார் மற்றும் அரச பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்பட்டால் அதிலிருந்து வெளிவருவோரை உலகிற்கு நாம் வழங்க முடியும்.

எனவே அதற்கு இணையான திட்டத்தை தயாரிக்க வேண்டும். சுகாதாரத்துறை அமைச்சர் என்ற முறையில் 3 தனியார் பல்கலைகழகங்களை உருவாக்க நான் அனுமதி அளித்துள்ளேன் என தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles