தற்போது பெய்து வரும் கடும் மழை காரணமாக மவுஸ்ஸாக்கலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் சுமார் 12 அடி உயர்ந்துள்ளதாக நீர்த்தேக்கத்திற்குப் பொறுப்பான பொறியியலாளர் குறிப்பிட்டார்.
மேலும், நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் உபரிநீர் மட்டத்தை எட்டுவதற்கு மேலும் 22 அடி தேவை என அவர் தெரிவித்தார்.
அண்மைக்கால வரட்சியான காலநிலை காரணமாக நீர்த்தேக்கத்தில் தோன்றிய மத வழிபாட்டுத் தலங்கள் தற்போது காணாமல் போயுள்ளதுடன், லக்ஷபான மின் உற்பத்தி நிலைய வளாகத்திற்குட்பட்ட கனியன், லக்ஷபான, நியூ லக்ஷபான மற்றும் பொல்பிட்டிய மின் உற்பத்தி நிலையங்களுக்கு மவுஸ்ஸகலே நீர்த்தேக்கம் பிரதானமாக நீர் விநியோகம் செய்கிறது.