நாட்டில் தொழுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டின் முதல் 07 மாதங்களுக்குள் 864 தொழுநோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கொழும்பில் மாத்திரம் 161 தொழுநோயாளர்களும் எகொடவெல சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 47 தொழுநோயாளர்களும் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொழுநோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
மேல் மாகாணத்தில் அடுத்த வாரம் முதல் விழிப்புணர்வு பதாகைகளை காட்சிப்படுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சின் தொழுநோய் தடுப்பு பிரிவின் விசேட வைத்திய நிபுணர் பிரசாத் ரணவீர குறிப்பிட்டார்.