மேலும் 170 இலங்கையர்கள் தொழில் நிமித்தம் தென் கொரியாவிற்கு சென்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் UL 470 ஊடாக ஆண்களும் பெண்களும் அடங்கிய குழு செவ்வாய்க்கிழமை (செப். 05) புறப்பட்டதாக பணியகம் தெரிவித்துள்ளது.
இந்த வருடத்தின் முதல் 08 மாதங்களுக்குள் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் மொத்தமாக 4,556 இலங்கையர்கள் தென் கொரியாவிற்கு வேலை வாய்ப்புக்காக அனுப்பப்பட்டுள்ளனர்.
தமது சேவைக் காலத்தை பூர்த்தி செய்த 3,565 இலங்கையர்களில், 991 பேர் தென் கொரியாவில் தங்களின் முந்தைய வேலைவாய்ப்பில் மீண்டும் சேர்வதற்காக மீண்டும் அனுமதி பெற்றுள்ளனர்.
தென் கொரியாவில் பணிபுரியும் இலங்கையர்களின் மொத்த எண்ணிக்கையில், உற்பத்தித் துறையில் 3,774, மீன்பிடித் துறையில் 639, கட்டுமானத் துறையில் 140 மற்றும் விவசாயத் துறையில் 3 பேர் உள்ளனர்.
குழுவில் மொத்தம் 4,462 ஆண்கள் மற்றும் 94 பெண்கள் உள்ளனர் என பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.