பிஸ்கெட் பக்கட்டில் ஒரு பிஸ்கெட் குறைந்ததற்காக ஒரு இலட்சம் ரூபா இழப்பீடாக பெறப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டில் சென்னையில் பதிவாகியுள்ளது.
ஐடிசி நிறுவனம் தயாரிக்கும் பிஸ்கெட் வகை ஒன்றில் இவ்வாறு ஒரு பிஸ்கெட் குறைவாக வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
தெரு நாய்களுக்கு கொடுப்பதற்காக வாங்கிய பிஸ்கெட் பக்கட்டில் 16 பிஸ்கெட்டுகளுக்கு பதிலாக 15 பிஸ்கெட்டுகள் இருந்ததால் குறித்த வாடிக்கையாளர் நுகர்வோர் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அதற்கமைய, வழக்கை விசாரித்த நீதிமன்றம் வாடிக்கையாளருக்கு ஒரு இலட்சம் ரூபாவை இழப்பீடாக வழங்குமாறு ஐடிசி நிறுவனத்துக்கு உத்தரவிட்டுள்ளது.