Friday, March 27, 2026
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவாகன விபத்தில் காவல்துறை அதிகாரி பலி

வாகன விபத்தில் காவல்துறை அதிகாரி பலி

வாகன விபத்தில் படுகாயமடைந்த காவல்துறை விசேட பணியகத்தின் புத்தளம் பிரிவின் பொறுப்பதிகாரி உயிரிழந்துள்ளார்.

கல்பிட்டி, மாம்புரி பகுதியைச் சேர்ந்தவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த 19ஆம் திகதி அவர் பயணித்த மோட்டார் சைக்கிள் லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானது.

காயமடைந்த பொலிஸ் பரிசோதகர் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக குருநாகல் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று (21) பிற்பகல் உயிரிழந்துள்ளார்.

புத்தளம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles