Monday, August 4, 2025
24.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமுறைப்பாடுகள் குறித்து விசாரணைகள் துரிதப்படுத்தப்படும் - மனித உரிமைகள் ஆணைக்குழு

முறைப்பாடுகள் குறித்து விசாரணைகள் துரிதப்படுத்தப்படும் – மனித உரிமைகள் ஆணைக்குழு

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அனுப்பப்பட்ட சுமார் 11,000 முறைப்பாடுகளை உடனடியாக விசாரிப்பதற்கான புதிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மனித உரிமைகள் ஆணைக்குழு ஜூன் மாதம் முதல் நீதியரசர் எல்.டி.பி. தெஹிதெனிய தலைமையில் இயங்கி வருகின்றது.

மேலும் அது முறைப்பாடுகளை நிவர்த்தி செய்வதற்கும் பொதுமக்களுக்கு நீதி வழங்குவதற்கும் புதிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

அதன்படி, அதன் தலைமை அலுவலகம் மற்றும் கிளை அலுவலகங்களில் விசாரணை நடத்தப்படும்.

பல்வேறு நிறுவனங்கள் மற்றும் ஆணைக்குழுக்களுக்கு அனுப்பப்பட வேண்டிய முறைப்பாடுகள் உண்மையில் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளின் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles