Monday, August 4, 2025
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅஞ்சலில் வந்த 14 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள்

அஞ்சலில் வந்த 14 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள்

கொழும்பு மத்திய அஞ்சல் பரிமாற்றகத்தில், 14 மில்லியன் ரூபா பெறுமதியான கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் அடங்கிய பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.

அமெரிக்கா, கனடா, பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து, இலங்கையின் போலி முகவரிகளுக்கு அனுப்பப்பட்ட பொதிகளிலிருந்தே இந்த போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த பொதிகளை பொறுப்பேற்க எவரும் முன்வராதமையினால், சந்தேகமடைந்த சுங்க அதிகாரிகள் அவற்றை சோதனையிட்டுள்ளனர்.

இதன்போது, அவற்றிலிருந்து 1.4 கிலோ நிறையுடைய கஞ்சா மற்றும் போதைமாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளதாக சுங்க திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles