மின்சாரக் கட்டணத்தை 32% ஆல் அதிகரிப்பதற்கான யோசனையை இலங்கை மின்சார சபை, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்துள்ளது.
எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்குத் தேவையான 54 பில்லியன் ரூபாவை ஈட்டுவதற்காக இந்த யோசனை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் ரொஹான் செனவிரத்ன, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்திற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடும் வரட்சி காரணமாக நீர் மின் உற்பத்தி குறைந்துள்ளதால் 3500 மெகாவோட் மின்சார உற்பத்தி கடும் நெருக்கடியை சந்திக்கலாம்.
இதன்படி, மின்சார அலகு ஒன்றிற்கு அறவிடப்படும் 42 ரூபா தொகை 56 ரூபாவாக அதிகரிக்கப்படுமென மதிப்பிடப்பட்டுள்ளது என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.