Friday, January 30, 2026
23.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவீட்டு வாடகை சட்டத்தை ரத்து செய்ய அனுமதி

வீட்டு வாடகை சட்டத்தை ரத்து செய்ய அனுமதி

972 ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்க வீட்டு வாடகை சட்டத்தை ரத்து செய்து குடியிருப்போர் பாதுகாப்புச் சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

காணி உரிமையாளர்கள் மற்றும் வாடகை குடியிருப்பாளர்களின் உரிமைகள் மற்றும் கடமைகளை நிர்ணயிக்கும் நோக்கத்துடன் அறிமுகப்படுத்தப்பட்ட 1972 ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்க வீட்டு வாடகை சட்டத்தில் பல சந்தர்ப்பங்களில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

ஆனால், குறித்த சட்டத்தில், எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படாமை கண்டறியப்பட்டுள்ளது.

வாடகை சட்டம் குறித்த ஆலோசனைக் குழுவால், இந்த விடயம் ஆய்வு செய்யப்பட்டு, அதற்கேற்ப, காணி உரிமையாளர்கள் மற்றும் வாடகை குடியிருப்பாளர்களின் உரிமைகளை சமமாக பாதுகாக்கும் நோக்கில் புதிய சட்டமூலமொன்று தயாரிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles