Friday, January 30, 2026
31.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கையில் மேலும் 2 சர்வதேச மைதானங்களை நிறுவ நடவடிக்கை

இலங்கையில் மேலும் 2 சர்வதேச மைதானங்களை நிறுவ நடவடிக்கை

இலங்கையில் மேலும் இரண்டு சர்வதேச மைதானங்களை நிர்மாணிப்பது தொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளை நடத்த இலங்கைக்கு மேலும் இரண்டு சர்வதேச மைதானங்கள் தேவை என ஆசிய கிரிக்கட் பேரவையின் தலைவர் ஜெய் ஷா ஜனாதிபதியை சந்தித்த போது தெரிவித்துள்ளார்.

இரண்டு சர்வதேச மைதானங்களை நிறுவுவதற்காக வசதிகளை அமைத்து கொடுத்தால், இரண்டு சர்வதேச மைதானங்களை உருவாக்க முடியும் என்று ஜெய் ஷா கூறியிருந்தார்.

அப்போது, ​​மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கம் மற்றும் காலி பிரதேசத்தில் காணியொன்றை வழங்க நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

அதன்போது யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கட் மைதானம் அமைப்பதற்கு வசதி செய்து தருமாறு ஆசிய கிரிக்கட் பேரவையின் தலைவர் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தார்.

யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை நிர்மாணிப்பதன் மூலம், சென்னையில் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளை யாழ்ப்பாணத்தில் நடத்த முடியும் என்பதுடன், இலங்கையின் சுற்றுலாத்துறையையும் மேம்படுத்த முடியும் என ஜெய் ஷா சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles