கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் (ASPI) திங்கட்கிழமை (04) கணிசமான ஏற்றத்தைப் பதிவுசெய்துள்ளது.
அதன்படி, இன்று அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 218.22 புள்ளிகளைப் பெற்று, 11,374.64 புள்ளிகளில் நிறைவடைந்தது.
இது கடந்த வர்த்தக நாளை விட 1.96% அதிகமாகும்.
இதேவேளை 3.3 பில்லியன் ரூபாய் மொத்தப்புரள்வாக இன்று பதிவானது.