நாட்டில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக இரத்தினபுரி மாவட்டத்தின் எஹெலியகொட பிரதேச செயலகப் பிரிவுக்கு மூன்றாம் நிலை சிவப்பு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், களுத்துறை, கேகாலை மற்றும் காலி மாவட்டங்களில் பல பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட நிலை 1 மற்றும் நிலை 2 மண்சரிவு எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் உள்ளது.
எனவே இப்பகுதியில் வசிக்கும் மக்கள், மண்சரிவு மற்றும் பாறைகள் உருண்டு விழுதல் குறித்து விழிப்புடன் செயற்படுமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.