நீர் மின் உற்பத்தி 14% ஆக அதிகரித்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த தெரிவித்தார்.
பல பகுதிகளில் மழை பெய்தாலும் நீர் மின் நிலையங்களை சுற்றியுள்ள பகுதிகளில் கணிசமான அளவு மழை பெய்யவில்லை.
வறட்சியான காலநிலையுடன் கடந்த சில நாட்களாக நீர்மின் உற்பத்தி 11% முதல் 12% வரை காணப்படுவதாகவும், சமனல குளத்தின் நீர் கசிவுகளை மூடுவது தொடர்பில் மேலதிக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.