கொலை உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களை செய்து நாட்டை விட்டு தப்பிச் சென்ற 148 பாதாள உலக குற்றவாளிகளை கைது செய்ய இன்டர்போல் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
திறந்த மற்றும் பொறுப்பான அரசாங்கத்திற்கான துறைசார் மேற்பார்வைக்கான நாடாளுமன்றக் குழுவில் உரையாற்றும் போதே குற்றவியல் மற்றும் சட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அசங்க கரவிட்ட இதனைத் தெரிவித்தார்.
இலங்கை பொலிஸாரின் கோரிக்கைக்கு அமைய சந்தேகநபர்கள் வேறு நாடுகளுக்கு தப்பிச் செல்வதை தடுப்பதற்காக சர்வதேச பொலிசார் இந்த சிவப்பு அறிவித்தல்களை வழங்கியுள்ளனர்.
சந்தேக நபர்களில் சிலர் ஏற்கனவே இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாகவும் மேலும் 12 சந்தேக நபர்கள் இந்தியாவில் கைது செய்யப்பட்டு அந்நாட்டில் வழக்குத் தொடரப்பட்டுள்ளதாகவும் அசங்க கரவிட்ட தெரிவித்தார்.