Sunday, April 12, 2026
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுUNPயின் 77 ஆவது ஆண்டு விழா ஒத்திவைப்பு

UNPயின் 77 ஆவது ஆண்டு விழா ஒத்திவைப்பு

ஐக்கிய தேசியக் கட்சியின் 77 ஆவது ஆண்டு விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அதனை டிசம்பர் மாதம் வரை ஒத்திவைக்க நேற்று (03) பிற்பகல் கட்சியின் தலைவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார்.

செப்டெம்பர் 10 ஆம் திகதி கொழும்பில் குறித்த விழாவை நடத்த தீர்மானிக்கப்பட்டிருந்தது.

தற்போதைய சீரற்ற வானிலை மற்றும் அடுத்த இரண்டு மாதங்களில் அமெரிக்கா, சீனா மற்றும் கியூபா ஆகிய நாடுகளுக்கு திட்டமிடப்பட்டுள்ள ஜனாதிபதியின் விஜயம் ஆகியவற்றால் ஆண்டு நிறைவு விழாவை டிசம்பர் வரை ஒத்திவைக்க நேரிட்டதாக ஐக்கிய தேசியக் கட்சி வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

இந்த ஆண்டு விழாவில் கட்சியின் புதிய அரசியலமைப்புக்கும் ஒப்புதல் அளிக்கப்பட உள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles