செய்திகள்உள்நாட்டுதிமிங்கல வாந்தியுடன் மூவர் கைது

திமிங்கல வாந்தியுடன் மூவர் கைது

கம்பஹா, நெதகமுவ பிரதேசத்தில் 646 கிராம் எடையுள்ள அம்பர் எனப்படும் பாதுகாக்கப்பட்ட திமிங்கல வாந்தியின் 3 துண்டுகளுடன் முன்னாள் இராணுவ சிப்பாய் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நெதகமுவ பகுதியை சேர்ந்த 28 வயதுடைய ஒருவரும், 48 வயதுடைய ஓய்வுபெற்ற அங்கவீனமுற்ற இராணுவச் சிப்பாய் ஒருவரும், கலகெடிஹேனையைச் சேர்ந்த 29 வயதுடைய ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதிக பெறுமதியான அம்பர் விற்பனைக்கு இருப்பதாக மேல் மாகாண புலனாய்வு பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய கம்பஹா குற்றப்புலனாய்வு பிரிவினர் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த மூவரிடமும் கைப்பற்றப்பட்ட அம்பர் 80 இலட்சம் ரூபாய் பெறுமதியானதென மதிப்பிடப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles